கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 153 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 794 பேர் வேட்புமனு தாக்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 153 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 794 பேர் வேட்புமனு தாக்கல்
கள்ளக்குறிச்சி
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 3 நகராட்சிகளில் உள்ள 72 பதவிகள், சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், மணலூர்பேட்டை, வடக்கனந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளில் உள்ள 81 பதவிகள் என மொத்தம் 153 பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 291 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் கடைசி நாளான நேற்று கள்ளக்குறிச்சி நகராட்சியில் 98 பேர், உளுந்தூர்பேட்டை நகராட்சியில் 65 பேர், திருக்கோவிலூர் நகராட்சியில் 105 பேர், சங்கராபுரம் பேரூராட்சியில் 57 பேர், தியாகதுருகம் பேரூராட்சியில் 78 பேர், சின்னசேலம் பேரூராட்சியில் 34 பேர், மணலூர்பேட்டை பேரூராட்சியில் 29 பேர், வடக்கனந்தல் பேரூராட்சியில் 37 பேர் என நேற்று ஒரே நாளில் 501 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 153 வார்டு கவுனசிலர் பதவிகளுக்கு 794 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story