அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்த 5 பேர் மீது வழக்கு
கீழ்வேளூர் பகுதியில் அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே தேவூர் கடைத்தெரு, சின்னகடை தெரு, தனியார் திருமண மண்டபம், ராமர்மடம் மெயின் ரோடு, சிக்கல் மெயின் ரோடு பகுதிகளில் அரசு அனுமதியின்றி விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் தேவூர் தெற்கு வீதியை சேர்ந்த தியாகராஜன், தேவூர் ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த ஹரிஹரன், காரியமங்கலத்தை சேர்ந்த செந்தில், மஞ்சகொல்லையை சேர்ந்த சங்கர், சிக்கலை சேர்ந்த பூமிநாதன் ஆகிய 5 பேர் மீது கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Related Tags :
Next Story