மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி தொட்டிச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்பிரகாஷ் (வயது41). டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய நண்பரான ஆறுமுகம் பொட்டப் பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்து வருகிறார். பணி முடிந்த பின்னர் மோட்டார் சைக்கிளை நண்பர் பிரகாஷ் வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளார். இதனை மர்மநபர் திருடிச்சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால முருகன் தலைமையில் சொக்கலிங்கபுரத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் கொட்டாம்பட்டியில் மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது விசாரணையில் நத்தம் கிழக்கு தெருவை சேர்ந்த அல்லாபிச்சை மகன் ரியாஸ்கான் (23) என்பது தெரியவந்தது.இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story