பரமக்குடி நகராட்சியில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதம்


பரமக்குடி நகராட்சியில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 4 Feb 2022 11:36 PM IST (Updated: 4 Feb 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி நகராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர் மட்டும் அனுமதிக்கப்பட்டதால் ஆதரவாளர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பரமக்குடி,

பரமக்குடி நகராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர் மட்டும் அனுமதிக்கப்பட்டதால் ஆதரவாளர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேட்பாளர்கள் மட்டும் அனுமதி

பரமக்குடி நகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று கடைசி நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய தி.மு.க., அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் உள்பட 120-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தங்களது மாற்று வேட்பாளருடன் குவிந்தனர். அவர்களுக்கு ஆதரவாக ஏராளமானோர் உடன் வந்தனர். இதனால் நகராட்சி பகுதி முழுவதும் மக்கள் கூட்டத்தால் களை கட்டியது. 
நகராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் வரை தடுப்பு வேலிகளை கொண்டு போலீசார் அடைந்திருந்தனர். அங்கிருந்து வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் மட்டும் நகராட்சி அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். உடன் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. 

வாக்குவாதம்

இதனால் வேட்பாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உள்ளே சென்ற வேட்பாளர்களில் சிலர் விண்ணப்ப படிவங்கள் குறித்து தேர்தல் அலுவலர்கள் கேட்கும் சந்தேக கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினர். உடனே அவர்கள் அருகிலிருந்த மாற்று வேட்பாளர்களிடமும் நகராட்சி அலுவலர்களிடமும் படிவத்தை கொடுத்து பூர்த்தி செய்தனர்.காலையில் தொடங்கிய வேட்புமனு மாலை வரை தொடர்ந்து இடைவிடாமல் நடைபெற்றது. 
வேட்புமனுத்தாக்கலை தொடர்ந்து பரமக்குடி துணை சூப்பிரண்டு. திருமலை தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையாளருமான திருமால் செல்வம் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நிகழ்வுகளை கண்காணித்தார்.

Next Story