நாம் தமிழர் கட்சி சார்பில் 75 வயது மூதாட்டி வேட்பு மனு தாக்கல்


நாம் தமிழர் கட்சி சார்பில் 75 வயது மூதாட்டி வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 4 Feb 2022 11:37 PM IST (Updated: 4 Feb 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை நகராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 75 வயது மூதாட்டி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 75 வயது மூதாட்டி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
மூதாட்டி வேட்பு மனு தாக்கல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. கடந்த மாதம் 28-ந் தேதி முதல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மயிலாடுதுறை‌ மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான தேர்தலில் போட்டியிட பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 23 வார்டுகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 17-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் 75 வயது மூதாட்டி சொர்ணாம்பாள் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த மூதாட்டி சொர்ணாம்பாள் நிருபர்களிடம் கூறுகையில், மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நகரசபை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்கள் பணியாற்ற எனக்கு வயது தடையாக இருக்காது என்றார்.

Next Story