சரக்கு வாகனத்தில் வந்த 300 பரிசு பொருட்கள் பறிமுதல்
கீழக்கரையில் சரக்கு வாகனத்தில் வந்த 300 பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கீழக்கரை,
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. .அதன்படி கீழக்கரை பகுதியில் இரவு நேரங்களில் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கன்னியாகுமரியில் இருந்து ராமநாதபுரம் சென்ற ஒரு சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வாகனத்தில் இருந்த டீ டம்ளர்கள் கொண்ட 300 பரிசு பொருட்களும் கணக்கில் வராத ரூ.56 ஆயிரமும் இருந்தது தெரியவந்தது. உடனே கீழக்கரை துணை தாசில்தார் பழனிக்குமார் ரொக்க பணத்தை கீழக்கரை நகராட்சியிலும் சரக்கு வாகனத்தை கீழக்கரை போலீஸ் நிலையத்திலும் ஒப்படைத்தார்.அப்போது முதுநிலை வருவாய் ஆய்வாளர் காசிவிசுவநாத துரை, கீழக்கரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story