பட்டா கணினி திருத்த சிறப்பு முகாம்
வெள்ளையபுரத்தில் பட்டா கணினி திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா வெள்ளையபுரத்தில் ஓரியூர், சிறுகம்பையூர் வருவாய் கிராமங்களுக்கான பட்டா கணினி திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 51 மனுக்கள் மீது உரிய விசாரணைக்கு பின்னர் 29 பேருக்கு பட்டா கணினி திருத்தம் தொடர்பான உத்தரவுகளை தாசில்தார் செந்தில்வேல் முருகன் வழங்கினார். மற்ற மனுக்கள் மீது உரிய விசாரணை செய்யப்பட்டு உத்தரவுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வெள்ளையபுரம் பரக்கத்அலி, சிறுகம்பையூர் குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சிவா, முகம்மது ரில்வான், தலைமை நில அளவர் காளிதாஸ், வருவாய் ஆய்வாளர் சிதம்பரம், நில அளவர் வசந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் மணிகண்டன், முனீஸ்வரமூர்த்தி, கார்த்திக், யாகப்பன், ராதா, இளநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திக் கண்ணன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
----------
Related Tags :
Next Story