டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டிக்கொலை


டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 4 Feb 2022 11:57 PM IST (Updated: 4 Feb 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவிலில் டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

காளையார்கோவில்,

காளையார்கோவிலில் டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

வாலிபர் கொலை

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே புரசடி உடைப்பு பகுதியில் திறந்தவெளி சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தை அடுத்த அதியதிரும்பல் கிராமத்தை சேர்ந்த சின்னையா மகன் சண்முகம்(வயது 32) என தெரிய வந்தது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. 

டாஸ்மாக் பார் ஊழியர்

இவர் கோைவயில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தற்போது சொந்த ஊருக்கு வந்த இடத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் உடலை பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை காளையார்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறியல்-கடையடைப்பு

இந்த நிலையில் சண்முகம் ெகாலை செய்யப்பட்டதை அறிந்ததும் அவரது உறவினர்கள் மறவமங்கலத்தில் காளையார்கோவில்-பரமக்குடி சாலையில் நேற்று திரண்டனர். கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் திடீெரன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மறவமங்கலத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

Related Tags :
Next Story