புனித அருளானந்தர் ஆலய திருவிழா கொடியேற்றம்
தேவகோட்டையில் புனித அருளானந்தர் ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.
காரைக்குடி,
தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள புனித அருளானந்தர் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடி அர்ச்சிப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து செஞ்சை பங்குத் தந்தை ஜான்பிரிட்டோ, கற்காத்தாக்குடி தியான மைய இயக்குனர் அருட்தந்தை மரியலூயிஸ் ஆகியோர் கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றினர். இன்று(சனிக்கிழமை) மாலை சப்பர பவனி நிகழ்ச்சியும் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியும், கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. புனித அருளானந்தர் ஆலய திருவிழாவையொட்டி ஆலயம் முழுவதும் மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ரஸ்தா அருங்கொடை இல்ல இயக்குனர் அருட்தந்தை இருதயராஜ் தலைமையில் பங்கு பேரவையினர், பங்கு இறைமக்கள், பங்கு சகோதரிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story