சீர்காழியில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை


சீர்காழியில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை
x
தினத்தந்தி 5 Feb 2022 12:42 AM IST (Updated: 5 Feb 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

நகர்மன்ற தேர்தலை முன்னிட்டு சீர்காழியில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சீர்காழி:
நகர்மன்ற தேர்தலை முன்னிட்டு சீர்காழியில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாகன சோதனை
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், சீர்காழி நகராட்சி தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உப்பனாறு, தென்பாதி, கைகாட்டி புறவழிச்சாலை, செம்மங்குடிசாலை சூரக்காடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பொருட்கள் எடுத்து சென்றால் பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஆவணங்களை சரிபார்த்து...
தேர்தல் பறக்கும் படை அதிகாரி கூட்டுறவு சார்பதிவாளர் செல்வராணி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களில் இருந்து சீர்காழியை நோக்கி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். 
இந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து ஆவணங்களை சரிபார்த்து அனுப்பி வைக்கின்றனர். மேலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை வீடியோ கேமராவில் பதிவு செய்து வருகின்றனர்.

Next Story