2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Feb 2022 12:55 AM IST (Updated: 5 Feb 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

புதுக்கோட்டை
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பூர்விகா ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் நடத்திய அதிரடி சோதனையில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தவர்களிடம் இருந்து சுமார் 27 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், வெள்ளனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மேலூர் பகுதியில் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான 40 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 

Next Story