தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை


தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை
x
தினத்தந்தி 5 Feb 2022 1:01 AM IST (Updated: 5 Feb 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்

விராலிமலை
விராலிமலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). கொத்தனார். இவரது மனைவி கார்த்திகா (31). இருவரும் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இருவரின் குடும்பத்தினரும் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இருவரும் விராலிமலையில் தனியே வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.  கார்த்திக்கிற்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதேபோல, நேற்று முன்தினமும் கார்த்திக் குடித்துவிட்டு வந்து கார்த்திகாவிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த கார்த்திகா பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால், அன்று மாலையே வீடு திரும்பினார். அப்போது கார்த்திக் வீட்டினுள் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து விராலிமலை போலீசில் கார்த்திகா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story