மூதாட்டி தற்கொலை


மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 5 Feb 2022 1:04 AM IST (Updated: 5 Feb 2022 1:04 AM IST)
t-max-icont-min-icon

மூலைக்கரைப்பட்டி அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி செல்வமணி (வயது 70). இவர்களுக்கு 3 மகன்கள். அனைவரும் திருமணமாகி உள்ளூரில் வசித்து வருகிறார்கள். முத்தையா இறந்துவிட்டதால் செல்வமணி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் செல்வமணி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல செல்வமணி தூங்கச் சென்றார். நேற்று காலை வெகு நேரமாகியும் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, செல்வமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றிய தகவலறிந்ததும் மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆபிரகாம் ஜோசப் மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்வமணியின் மகன் தேவராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story