நாய் கடித்ததில் சிறுவன் உள்பட 12 பேர் காயம்


நாய் கடித்ததில் சிறுவன் உள்பட 12 பேர் காயம்
x
தினத்தந்தி 5 Feb 2022 1:25 AM IST (Updated: 5 Feb 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் நாய் கடித்ததில் சிறுவன் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர்.

ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் நாய் கடித்ததில் சிறுவன் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். 
12 ேபர் காயம் 
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அமைந்துள்ள மங்காபுரம், முத்தன் தெரு மற்றும் ஆண்டத்தம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் நாய்களின் ெதால்லை அதிகமாக உள்ளது. 
இந்த நிலையில் ஒரு வெறி நாயை, மற்ற நாய்கள் விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நாய் தெருவில் செல்வோர், போவோரை எல்லாம் விரட்டி கடித்துள்ளது. இதில் மங்காபுரத்தை சேர்ந்த முருகன், தமிழ்செல்வி, தாமோதரன் மற்றும் சிறுவன் ராஜேஷ் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். 
நடவடிக்கை 
மேலும் அங்கிருந்த பசு மாட்டின் தாடை மற்றும் காது பகுதிகளை வெறி நாய் கடித்ததில் மாட்டுக்கு காயம் ஏற்பட்டது. 
காயமடைந்த 12 பேரும் ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு திரும்பினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
தற்போது 12 பேரை நாய் கடித்துள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story