சிவன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு


சிவன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 5 Feb 2022 1:25 AM IST (Updated: 5 Feb 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

சிவன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பிரகாரத்தில் அருள்பாலிக்கும் துர்க்கை அம்மனுக்கு நேற்று வெள்ளிக்கிழமை ராகு காலத்தை முன்னிட்டு  சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் வண்ண மலர்களால் துர்க்கையம்மன் அலங்கரிக்கப்பட்டு மங்கள ஆரத்தி நடைபெற்றது. அம்மனுக்கு பக்தர்கள் எலுமிச்சை மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தனர். மேலும் தை மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு விசாலாட்சி அம்மனுக்கு மஞ்சள் பொடி, திரவிய பொடி, வில்வ பொடி, அருகம்புல் பொடி, நெல்லி முள்ளி பொடி, தேன், பால், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விசாலாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. அம்மனை நோக்கி அபிராமி அந்தாதி, அம்மன் துதி உள்ளிட்ட பல்வேறு பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. அம்மனுக்கு சோடச உபசாரங்கள் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.

Next Story