419 பேர் வேட்பு மனு தாக்கல்


419 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 5 Feb 2022 1:38 AM IST (Updated: 5 Feb 2022 1:38 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் 419 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில், நகராட்சிகளில் அரியலூரில் 18 வார்டுகளிலும், ஜெயங்கொண்டத்தில் 21 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய பகுதிகளில் தலா 15 வார்டுகளிலும் என மொத்தம் 69 வார்டுகளுக்கு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 124 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று ஒரே நாளி்ல் அரியலூர் நகராட்சியில் 115 பேரும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 106 பேரும், உடையார்பாளையம் பேரூராட்சியில் 29 பேரும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 45 பேரும் என மொத்தம் 295 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அரியலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 69 இடங்களுக்கு போட்டியிட மொத்தம் 419 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story