பஞ்சாயத்து பகுதிகளில் குடிநீர் தர பரிசோதனை


பஞ்சாயத்து பகுதிகளில் குடிநீர் தர பரிசோதனை
x
தினத்தந்தி 5 Feb 2022 1:40 AM IST (Updated: 5 Feb 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி, திருச்சுழி பஞ்சாயத்து பகுதிகளில் குடிநீர் தர பரிசோதனை செய்யப்பட்டது.

சிவகாசி, 
சிவகாசி, திருச்சுழி பஞ்சாயத்து பகுதிகளில் குடிநீர் தர பரிசோதனை செய்யப்பட்டது. 
சிவகாசி 
சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ஜல்ஜீவன்மிஷன் என்ற குடிநீர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் குடிநீரின் தரம் குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அதற்கென நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டது. 
இணைய தளம் 
சிவகாசி அருகே உள்ள கட்டசின்னம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு குடிநீர் தரபரிசோதனையை தொடங்கி வைத்தனர். பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அந்த முடிவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 
இதேபோல் ஆனையூர், செங்கமலநாச்சியார்புரம், எம்.புதுப்பட்டி, காளையார்குறிச்சி, எரிச்ச நத்தம், ஈஞ்சார் உள்ளிட்ட பல பஞ்சாயத்துக்களிலும் குடிநீர் தரம் குறித்த பரிசோதனைகள் நடைபெற்றது. 
திருச்சுழி 
அதேபோல திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், சவ்வாசுபுரம் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது குழாய் மற்றும் தனிநபர் இல்லத்தில் பயன்படுத்தப்படும் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் பரிசோதனை செய்து காண்பிக்கப்பட்டது. பரிசோதனையின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் நாகமூர்த்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசீலன், ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி சீமைச்சாமி மற்றும் ஊராட்சி செயலர் ராஜபாண்டி ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.
சென்னல்குடி கிராமத்தில் குடிநீர் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர்ராஜன், ஊராட்சி செயலர் அன்பழகன், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கார்த்திகா, செல்வி, முத்து, பாக்கியம் மற்றும் ஆப்ரேட்டர் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். முத்துராமலிங்கபுரம் ஊராட்சியில் நடந்த குடிநீர் தர பரிசோதனை முகாமில் ஊராட்சி தலைவர் பூமிநாதன், செயலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story