தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தூக்குப்போட்டு ஓட்டல் உரிமையாளர் தற்கொலை
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தூக்குப்போட்டு ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தூக்குப்போட்டு ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
வாலிபர்
ஈரோடு திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் விஜயகுமார் (வயது 27). இவர் ஈரோட்டில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். மேலும் ஆயில் விற்பனை செய்யும் தனது தந்தைக்கு உதவியாகவும் இருந்து வந்தார்.
விஜயகுமாருக்கு ஓட்டல் தொழிலில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஓட்டலில் இருந்து விஜயகுமார் வீட்டுக்கு வந்து ஒரு அறையில் இருந்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதைத்தொடர்ந்து மாலையில் அவருடைய நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் விஜயகுமார் இருந்த அறையை அவருடைய தந்தை தட்டி பார்த்தார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சரவணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது விஜயகுமார் தூக்குப்போட்டு தொங்கியபடி கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயகுமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story