வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 5 Feb 2022 1:50 AM IST (Updated: 5 Feb 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மானூாில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:

நெல்லை மானூர் மதவக்குறிச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 34). இவர் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை சமீபத்தில் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையொட்டி முருகேசனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் துரைகுமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை ஐகிரவுண்டு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாம்சன் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.

Next Story