கொரோனாவுக்கு மேலும் 3 முதியவர்கள் பலி


கொரோனாவுக்கு மேலும் 3 முதியவர்கள் பலி
x
தினத்தந்தி 5 Feb 2022 1:59 AM IST (Updated: 5 Feb 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 முதியவர்கள் பலியாகினர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதிப்புடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எரியோடு பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல்லை சேர்ந்த 76 வயது முதியவர், கொடைக்கானல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வில்பட்டி பகுதியை சேர்ந்த 84 வயது முதியவர் ஆகிய 3 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி பலியாகினர். 

இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்தது. இதற்கிடையே நேற்று 24 பெண்கள் உள்பட மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 185 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 1,469 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story