தனி வார்டாக அறிவிக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்


தனி வார்டாக அறிவிக்க வலியுறுத்தி  உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 5 Feb 2022 2:35 AM IST (Updated: 5 Feb 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினம் நகராட்சி 18-வது வார்டை தனி வார்டாக அறிவிக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது.

அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினம் நகராட்சி 18-வது வார்டை தனி வார்டாக அறிவிக்க வலியுறுத்தி  உண்ணாவிரதம் நடைபெற்றது.
உண்ணாவிரதம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டு 27-வார்டுகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 18-வது வார்டை தனி வார்டாக அறிவிக்க கோரி  முத்தம்மாள் தெரு பொதுமக்கள் நேற்று முன்தினம் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் 18-வது வார்டை தனி வார்டாக அறிவிக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் தெரிவித்தனர். இந்தநிலையில் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் நேற்று அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஸ்வரன், அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்றும் உண்ணாவிரதத்தை தொடர உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

Next Story