மினிலாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.1.32 லட்சம் பறிமுதல்
திருவையாாறு அருகே உரிய ஆவணங்கள் இன்றி மினிலாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.1.32 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவையாறு;
திருவையாாறு அருகே உரிய ஆவணங்கள் இன்றி மினிலாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.1.32 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம்- பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று மாலை திருவையாறு அருகே உள்ள திருவாலம்பொழில் மெயின்ரோட்டில் பறக்கும்படை அதிகாரி கீதா தலைமையில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
பறிமுதல்
அப்போது திருக்காட்டுப்பள்ளியிலிருந்து திருவையாறு நோக்கி ஒரு மினி லாரி வந்தது. இந்த மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் மினிலாரியில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1லட்சத்து 32 ஆயிரம் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மினிலாரி டிரைவர் மோகன்ராஜ் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளி அன்சாரி ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கருவூலத்தில் ஒப்படைப்பு
விசாரணையில் தஞ்சையிலிருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு கடைகளில இறக்கி கொடுத்து விட்டு பணம் வசூல் செய்துவருவதாக அவர்கள் கூறினர். இந்த பணத்துக்கு உரிய ரசீது இல்லாததால் பறக்கும்படை அதிகாரி கீதா பணத்தை மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதியிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை திருவையாறு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story