நண்பராக பழகி துப்பாக்கி முனையில் வாலிபரிடம் ரூ.25 ஆயிரம் கொள்ளை 5 பேருக்கு வலைவீச்சு


நண்பராக பழகி துப்பாக்கி முனையில் வாலிபரிடம் ரூ.25 ஆயிரம் கொள்ளை 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Feb 2022 5:38 AM IST (Updated: 5 Feb 2022 5:38 AM IST)
t-max-icont-min-icon

நண்பராக பழகி துப்பாக்கி முனையில் ரூ.25 ஆயிரத்தை பறித்து சென்றது தொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சென்னை,

கோவையை அடுத்த கொண்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 32). இவரும் சென்னையை அடுத்த மணலியை சேர்ந்த அரி (30) என்பவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். அரியின் ஆலோசனை படி ரூ.20 ஆயிரத்திற்கு மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்க சுரேஷ்குமார் முடிவு செய்தார்.

இதையடுத்து கோவையில் இருந்து நண்பர் சங்கர் (34) என்பவருடன் மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக சுரேஷ்குமார் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டைக்கு நேரில் வந்தார்.

கொள்ளை

கவரைப்பேட்டைக்கு வந்தவுடன், சுரேஷ் குமார் மற்றும் சங்கர் இருவரையும் நண்பர்களுடன் கண்லூர் சுடுகாட்டுக்கு அருகே உள்ள தைலமரத்தோப்புக்கு அழைத்து சென்று கத்தி மற்றும் கையால் தாக்கி துப்பாக்கி முனையில் மிரட்டி சங்கரின் ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.15 ஆயிரம் மற்றும் அவரது தந்தை, மனைவியின் செல்போனை தொடர்பு கொண்டு கூகுள்பே மூலம் ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணலியை சேர்ந்த அரி உள்பட 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story