உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ2 லட்சத்து 17 ஆயிரத்து பறிமுதல்


உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ2 லட்சத்து 17 ஆயிரத்து பறிமுதல்
x
தினத்தந்தி 5 Feb 2022 5:23 PM IST (Updated: 5 Feb 2022 5:23 PM IST)
t-max-icont-min-icon

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ2 லட்சத்து 17 ஆயிரத்து பறிமுதல்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வணியம்பாடியை அடுத்த பத்தாபேட்டை பகுதியில் பறக்கும் படை அலுவலர் நந்தினி தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியைச் சோதனைச் செய்தனர்.

 அதில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராமகுப்பம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.75 ஆயிரத்தை பறிமுதல் செய்து உதயேந்திரம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் குருசாமியிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் வாணியம்பாடி-பெருமாள்பேட்டை பகுதியில் சித்ரா தலைமையிலான பறக்கும்படை குழுவினர் தீவிர வாகனச் சோதனைச் செய்தனர். 

அந்த வழியாக வந்த மினி வேனில் வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.73 ஆயிரத்தை பறிமுதல் ெசய்து நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்டாலின் பாபுவிடம் ஒப்படைத்தனர்.

மேலும் ஆலங்காயம் பேரூராட்சியில் ராஜபாளையம் கூட்ரோடு பகுதியில் பறக்கும் படை அதிகாரி தேவகுமார் தலைமையில் பறக்கும்படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.69 ஆயிரத்தை பறிமுதல் செய்து, ஆலங்காயம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

ஒரே நாளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story