நெல் அரிசி வியாபாரியிடம் ரூ5 லட்சம் பறிமுதல்


நெல் அரிசி வியாபாரியிடம் ரூ5 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Feb 2022 6:34 PM IST (Updated: 5 Feb 2022 6:34 PM IST)
t-max-icont-min-icon

நெல் அரிசி வியாபாரியிடம் ரூ5 லட்சம் பறிமுதல்

ஆற்காடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பறக்கும்படை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் இன்று ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிஸ்மில்லா தலைமையில் திமிரி அருகே கலவை சாலையில் வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக கலவை தாலுகா மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த நெல்-அரிசி வியாபாரி ஜனார்த்தன் (வயது 46) என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்தார். 

அவரை நிறுத்தி சோதனை செய்தபோது மோட்டார்சைக்கிளில் ஆவணங்கள் ஏதுமின்றி வைத்திருந்த ரூ.5 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து திமிரி பேரூராட்சித் தேர்தல் பொறுப்பாளர் ஏழுமலையிடம் ஒப்படைத்தனர்.

Next Story