ராணுவ வீரர்களுக்கு ஹெலிகாப்டர் பயிற்சி
குன்னூரில் ராணுவ வீரர்களுக்கு ஹெலிகாப்டர் பயிற்சி அளிக்கப்பட்டது.
குன்னூர்
குன்னூரில் ராணுவ வீரர்களுக்கு ஹெலிகாப்டர் பயிற்சி அளிக்கப்பட்டது.
வெலிங்டன் கல்லூரி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு இந்தியா மற்றும் நட்பு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டரை இயக்குவது உள்பட பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் 8-ந் தேதி கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் வந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. கடும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்தது விசாரணையில் தெரியவந்தது. விபத்துக்கு பிறகு அந்த இடத்தில் மற்றொரு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வட்டமடித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஹெலிகாப்டர் பயிற்சி
இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் ஜிம்கானா மைதானத்துக்கு வீரர்களின் பயிற்சிக்காக ராணுவ ராணுவ ஹெலிகாப்டர் வந்தது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.
பின்னர் 6 முறை வானில் வட்டமடித்து தரையில் இறக்கி மேலே ஏற்றப்பட்டது. இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அங்கு சுமார் 2 மாதங்களுக்கு பிறகு ராணுவ அதிகாரிகளுக்கு ஹெலிகாப்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் காலநிலை பனிமூட்டம் இன்றி இருந்ததால் பயிற்சிக்கு ஏற்றதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story