மனைவியை காரில் கடத்தியதாக நிதி நிறுவன அதிபர் மீது புகார்
மனைவியை காரில் கடத்தியதாக நிதிநிறுவன அதிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள வள்ளிபட்டியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 41). அவருடைய மனைவி ராணி (36). இவர்கள், கும்பகோணத்தில் வசித்து வருகின்றனர். அங்கு அன்பழகன் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு, வேடசந்தூர் அருகே உள்ள புதுவாணிக்கரையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு ராணி வந்து விட்டார்.
இந்தநிலையில் புதுவாணிக்கரைக்கு வந்த அன்பழகன், தனது மனைவி ராணியை தாக்கி காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ராணியின் தாய் மீனாட்சியம்மாள், கூம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் அன்பழகனின் செல்போன் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story