அரசு பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர் தேர்தல் பார்வையாளர்
பள்ளிகளுக்கு தேவயைான வசதிகள், மாணவ மாணவிகளின் வருங்கால குறிக்கோள் குறித்து அவர்களுடன் கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர் கலந்துரையாடினர்.
திருப்பத்தூர்
பள்ளிகளுக்கு தேவயைான வசதிகள், மாணவ மாணவிகளின் வருங்கால குறிக்கோள் குறித்து அவர்களுடன் கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர் கலந்துரையாடினர்.
கலந்துரையாடல்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் 12 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட தேர்தல் பார்வையாளரும் தமிழ்நாடு குடிநீர் வாரிய இணை மேலாண்மை இயக்குனருமான எம்.பிரதீப்குமார் ஆகியோர் தலைமையில் நடந்தது.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
வருங்கால குறிக்கோள்
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் குடிநீர் வசதி, கட்டிட வசதிகள் ஆகியவை மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நன்றாக உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்த 6 மாத காலத்துக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள 10 அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கின்ற 12 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் உங்களின் வருங்கால குறிக்கோள் மற்றும் பொழுதுப் போக்கு, பள்ளிகளுக்கு என்னென்ன தேவைகள்? எனக் கேட்கப்பட்டது.
நன்றாக படித்து..
அப்போது பள்ளி மாணவ-மாணவிகள், எங்களுடைய பள்ளிகளில் கட்டிட வசதி, கழிப்பிட வசதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் தேவைப்படுகிறது, எனத் தெரிவித்தனர்.
அதற்கு அதிகாரிகள், உங்களின் தேவைகளை விரைவில் நிவர்த்தி செய்யப்படும், அனைத்து வட்டங்களிலும் ஒரு சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் அனைவரும் நன்றாக படித்து எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டுமோ அதை இப்போது இருந்தே செயல்படுத்துங்கள். மேலும் திட்டமிட்டு அதனை செயல்படுத்தி நீங்கள் அனைவரும் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும், என அதிகாரிகள் கூறினர்.
மாணவ-மாணவிகளுக்கு புத்தகம்
நிகழ்ச்சியில் தெரிந்து கொண்டதை உங்களின் நண்பர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களையும் வாழ்வில் முன்னேற்றமடைய செய்ய வேண்டும்.
அனைவருக்கும் வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துகள், என அதிகாரிகள் கூறினர்.
அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு ‘அக்னிச் சிறகுகள்’ புத்தகங்களை அதிகாரிகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் அய்யன்னன், தாசில்தார் சிவபிரகாசம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story