தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி


தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 5 Feb 2022 9:37 PM IST (Updated: 5 Feb 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்.

தேனி :
தேனி மாவட்டத்தில் நேற்று புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 386 பேர் நேற்று குணமாகினர். மாவட்டத்தில் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் கொரோனா பாதிப்புடன் 1,651 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே தேனி பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அதுபோல் தேனி பகுதியை சேர்ந்த 82 வயது மூதாட்டி கொரோனா பாதிப்புடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story