வண்டல் மண் கடத்த முயற்சி பொக்லைன் எந்திரம் டிராக்டர் பறிமுதல்
வண்டல் மண் கடத்த முயற்சி பொக்லைன் எந்திரம் டிராக்டர் பறிமுதல்
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் வருவாய்துறையினர் இரவு நேரம் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது காட்டுவன்னஞ்சூர் பகுதியில் மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரில் வண்டல் மண் ஏற்றிக் கொண்டு இருந்ததை பார்த்த கோட்டாட்சியர் சரவணன் அருகில் சென்றபோது பொக்லைன் எந்திரம், டிராக்ரை அங்கேயே விட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர்.
விசாரணையில் வண்டல் மண் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இது குறித்துகிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து மண் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story