கிருஷ்ணகிரியில் தேர்தல் பார்வையாளருடன் கலெக்டர் ஆலோசனை
கிருஷ்ணகிரி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளருடன் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஜெயசந்திரபானுரெட்டி ஆலோசனை நடத்தினர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளருடன், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானுரெட்டி ஆலோசனை நடத்தினர்.
தேர்தல் பார்வையாளர் வருகை
கிருஷ்ணகிரி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளராக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் நிர்வாக இயக்குனர் வந்தனா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளருடன், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானுரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
மாவட்ட தேர்தல் பார்வையாளராக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் நிர்வாக இயக்குனர் வந்தனா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பார்வையாளர் சூளகிரியில் அமைந்துள்ள பவர்கீரிட்டில் முகாமிட்டு தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
ஆய்வு
எனவே, நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் தொடர்பாக தேர்தல் பார்வையாளரை, சூளகிரியில் அமைந்துள்ள பவர்கீரிட்டில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை (1 மணி நேரம்) நேரிலும், 90259 82273 என்கிற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து தேர்தல் பார்வையாளர் வந்தனா கார்க் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் நடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் தேர்தல் அலுவலர் முருகேசன் உள்ளார்.
Related Tags :
Next Story