தர்மபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
கோவையில் காந்தி நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்த சென்றவர்களை கோட்சே பெயரை கூறக்கூடாது என தடுத்த போலீசாரை கண்டித்து திராவிடர் கழகத்தினர் தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் யாழ்திலீபன், மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன், முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கராசு மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். கோட்சே ஆப்தே என்ற பெயரில் விருது வழங்குவதை கண்டித்தும், கோவையில் கோட்சே பெயரை கூறக்கூடாது என தடுத்த போலீசாரை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story