வேட்புமனு பரிசீலனை செய்யும் பணியை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு


வேட்புமனு பரிசீலனை செய்யும் பணியை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Feb 2022 11:06 PM IST (Updated: 5 Feb 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

வேட்புமனு பரிசீலனை செய்யும் பணியை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள் வரப் பெற்றன. 

தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வார்டு வாரியாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்தவர்களை வரவழைத்து வேட்பு மனுக்கள் ஏற்பு மற்றும் நிராகரிப்பு குறித்துத் தெரிவித்தனர்.

வேட்புமனுவுடன் வழங்கிய படிவங்களில் உரிய முறையில் பூர்த்தி செய்து ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதா? என சரிபார்த்த பின், வேட்பு மனுவை தாக்கல் செய்தவர் மற்றும் அவரின் முகவர்களிடம் தெரிவித்து வேட்பு மனு ஏற்கப்பட்டது என்றும், வேட்புமனுக்கள் நிராகரிப்பு குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் தெரிவித்து வேட்புமனுவை நிராகரித்தனர். 

அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அதை மனு தாக்கல் செய்தவர்கள் தெரிவிக்கலாம், எனத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர். அதற்கான விளக்கங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கினர். 

மேற்கண்ட தேர்தல் பணிகளை காவேரிப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் எஸ்.வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது வேட்புமனுக்கள் ஏற்பு மற்றும் நிராகரிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். 

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டாரத் தேர்தல் பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story