வடக்கனந்தல் பேரூராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்
வடக்கனந்தல் பேரூராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வுசெய்தார்
கச்சிராயப்பாளையம்
பதற்றமான வாக்குச்சாவடிகள்
வடக்கனந்தல் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதற்கு 81 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வாக்களிப்பதற்காக 21 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் அக்கராயப்பாளையம், அம்மாபேட்டை, கச்சிராயப்பாளையம், வாக்குச்சாவடிகள், வடக்கனந்தலில் 2 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் அக்கராயப்பாளையத்தில் உள்ள அரசு ஆசாத் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
கூடுதல் பாதுகாப்பு
அப்போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கும், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், வாக்களிக்க வரும் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து வடக்கனந்தல், அம்மாபேட்டை, கச்சிராயப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாடிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், செயல் அலுவலருமான ஆறுமுகம், தாசில்தார் அனந்தசயனன், வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story