401 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


401 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 5 Feb 2022 11:53 PM IST (Updated: 5 Feb 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் 401 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் வந்து செலுத்திக்கொண்டனர்.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் 401 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் வந்து செலுத்திக்கொண்டனர். 
பல்வேறு நடவடிக்கை
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் செலுத்திக்கொள்ளவும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு எந்தவித சிரமமின்றி எளிதில் அணுக கூடிய வகையில் மக்களின் இருப்பிடங்களுக்கு அருகில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்  நடத்தப்பட்டு வருகிறது. 
401 இடங்களில் தடுப்பூசி முகாம் 
அந்தவகையில் 21-வது கட்டமாக நேற்று திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் 244 இடங்களிலும், நகராட்சிகளில் 42 இடங்களிலும், பேரூராட்சிகளில் 15 இடங்களிலும், 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 8 அரசு ஆஸ்பத்திரிகளிலும்,  திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி,  மாவட்ட கலெக்டர் அலுவலகம், நடமாடும் கொரோனா தடுப்பூசி குழு 40 என மொத்தம் 401 இடங்களில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Next Story