ஒருங்கிணைந்த பன்ணை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்


ஒருங்கிணைந்த பன்ணை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
x
தினத்தந்தி 5 Feb 2022 11:55 PM IST (Updated: 5 Feb 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

திருவையாறில் ஒருங்கிணைந்த பன்ணை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

திருவையாறு:-

திருவையாறில் ஒருங்கிணைந்த பன்ணை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 

ஆலோசனை கூட்டம்

திருவையாறில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நன்செய் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து தேர்வு செய்யப்பட்ட 50 விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் புனிதா, கால்நடை மருத்துவர் பாஸ்கரன் மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். 
கூட்டத்தில் திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்து பேசினார். 

மானியம்

இந்த திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கு ரூ.5 ஆயிரம், ஒரு பசுவிற்கு ரூ.15 ஆயிரம், 10 வெள்ளை ஆடுகளுக்கு ரூ.15 ஆயிரம், 10 கோழிகளுக்கு ரூ.3 ஆயிரம், 35 பழ  கன்றுகளுக்கு ரூ.1,770, 2 தேனி வளர்ப்பு பெட்டிகளுக்கு ரூ.3200, வீட்டு காய்கறி தோட்டபயிர் விதைகள் மற்றும் தீவண பயிர் விதைகளுக்கு ரூ.750 என மொத்தம் ரூ.45 ஆயிரத்துக்கு இடுப்பொருட்கள் மற்றும் பின்னேற்பு மானியமாக 50 சதவீதம் வழங்கப்படுகிறது என வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர். 
மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் ஒருகிணைந்த பண்ணைய திட்டம் உதவும் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர். 

Next Story