சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்


சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 6 Feb 2022 12:03 AM IST (Updated: 6 Feb 2022 12:03 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி மற்றும் திருக்கடையூர் பகுதிகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. சீர்காழியில் நடந்த முகாமை ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ஆய்வு செய்தனர்.

சீர்காழி:
சீர்காழி மற்றும் திருக்கடையூர் பகுதிகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. சீர்காழியில் நடந்த முகாமை ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ஆய்வு செய்தனர்.
சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழக அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொடர்ந்து ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திட்டை, சட்டநாதபுரம், கதிராமங்கலம், மருதங்குடி, கொண்டல், வள்ளுவக்குடி, அத்தியூர் உள்ளிட்ட 21 ஊராட்சிகளில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு முதல் மற்றும் 2-வது கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசியை போட்டுக் கொண்டனர்.
ஒன்றிய ஆணையர்கள் ஆய்வு
இந்த முகாமை ஒன்றிய ஆணையர்கள் இளங்கோவன், அருள்மொழி, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, பெரியசாமி, டாக்டர்கள், செவிலியர்கள், ஊராட்சி செயலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இதேபோல் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதேபோல் வைதீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. 
திருக்கடையூர்
திருக்கடையூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார். தடுப்பூசி முகாமை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் சந்திரகுமார் தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர்கள் வெங்கடேசன், ராதாகிருஷ்ணன், ஜெயக்குமார், கிராம அலுவலர் உதயகுமார், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Next Story