வேளுக்குடி வீரஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
வேளுக்குடி வீரஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது வீரஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு வடமாலை மற்றும் வெற்றிலை, அருகம்புல் மாலைகளுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story