அரசு துறை காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
அரசு துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
சிவகங்கை,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாண்டி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். இதில் மாவட்ட துணை தலைவர் முத்துக்குமார், மாவட்ட இணை செயலாளர் வினோத் ராஜா, மாவட்ட பொருளாளர் மாரி, .மாவட்ட நிர்வாகிகள் மூவேந்தன் மற்றும் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பங்கேற்பது, சிவகங்கை நகரம் மாவட்டத்தின் தலைநகராக இருந்தும் சிவகங்கை நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சி என தரம் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள் மிக குறைந்த அளவிலான வீட்டு வாடகைப்படி பெற்று வருகின்றனர். விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு காரணமாக பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சிவகங்கை நகராட்சியை நிலை 2 என தரம் உயர்த்தி அதற்கு உரிய வீட்டு வாடகைப்படி வழங்கவேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் அவுட்சோர்சிங் முறைகளை கைவிட்டு நிரந்தர பணியிடங்களை உருவாக்க தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.. அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story