வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்
திருப்பத்தூர் அருகே இரு வெவ்வேறு இடங்களில் நடந்த வாகன சோதனையின்போது உாிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்தை பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே இரு வெவ்வேறு இடங்களில் நடந்த வாகன சோதனையின்போது உாிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்தை பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதுரை செல்லும் சாலையில் கோட்டையிருப்பு அருகே தாசில்தார் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், போலீஸ்காரர்கள் குணசேகரன், பாண்டி, மலைச்சாமி ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு சென்ற காரை பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இதில் தஞ்சாவூரை சேர்ந்த வெங்காய வியாபாரி கருப்பையா மகன் ராஜீவ் காந்தி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.81 ஆயிரம் வைத்திருந்ததால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ரூ.2 லட்சம் பறிமுதல்
அதேபோல் காரைக்குடியில் இருந்து மதுரை சென்ற வாகனத்தை சோதனை செய்ததில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சர்க்கரை மகன் பாண்டியராஜன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 600-ஐ வைத்திருந்ததால் அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.இந்த 2 சம்பவங்களிலும் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 600 ரூபாய் சிக்கியது குறிப்பிடத்தக்கது. உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக்காள்ளலாம் என பறக்கும் படை அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
Related Tags :
Next Story