தரங்கம்பாடி பகுதியில் தேர்தல் கண்காணிப்பாளர் ஆய்வு


தரங்கம்பாடி பகுதியில் தேர்தல் கண்காணிப்பாளர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Feb 2022 12:35 AM IST (Updated: 6 Feb 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தரங்கம்பாடி பகுதியில் தேர்தல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தாா்.

பொறையாறு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தரங்கம்பாடி பகுதியில் தேர்தல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தாா்.
தேர்தல் கண்காணிப்பாளா் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய நகராட்சிகளுக்கும், தரங்கம்பாடி, குத்தாலம், மணல்மேடு, வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய பேரூராட்சிகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தேர்தல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குனர் விஜயேந்திர பாண்டியன், தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் பொறையாறு அருகே ஒழுகைமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரி பாபு தலைமையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கை செய்யும் பணியினையும் ஆய்வு செய்தார். 
 தொடர்ந்து அவர் தரங்கம்பாடி கடற்கரை பகுதிக்கு சென்று வரலாற்று சிறப்பு மிக்க டேனிஷ் கோட்டையில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். பிறகு சீகன்பால்க் வாழ்ந்த இல்லம், அவர் உருவாக்கிய பள்ளிக்கூடம், 305 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஏற்படுத்திய தமிழ் அச்சு எந்திரம் ஆகியவை அடங்கிய கண்காட்சி பொருட்களை பார்வையிட்டார். ஆய்வின்போது, தேர்தல் கண்காளிப்பாளரின் தொடர்பு அலுவலர் சுந்தரம், தரங்கம்பாடி தாசில்தார் ஹரிதரன், தரங்கம்பாடி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் இளங்கோ, இளநிலை உதவியாளர் மதியரசன், வரிதண்டலர் கருணாநிதி மற்றும் பறக்கும் படை அலுவலர் ஆகியோர் உடனிருந்தார்.

Next Story