போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2022 1:24 AM IST (Updated: 6 Feb 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

நெல்லை ராமையன்பட்டி ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). இவர் போக்சோ வழக்கில் நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீசாரால் கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற விக்னேஷ், கோர்ட்டில் நீண்ட நாட்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையொட்டி அவருக்கு கோர்ட்டு பிடி ஆணை பிறப்பித்தது.

இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் நேற்று விக்னேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story