20 வேட்பு மனுக்கள் தள்ளுபடி- 838 மனுக்கள் ஏற்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 838 மனுக்கள் ஏற்கப்பட்டன.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 838 மனுக்கள் ஏற்கப்பட்டன.
858 பேர் வேட்பு மனு தாக்கல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், மணல்மேடு, குத்தாலம். தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய 4 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு 123 கவுன்சிலர் பதவியிடங்களுக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது. மயிலாடுதுறை நகராட்சியில் 290 பேரும், சீர்காழி 150, குத்தாலம் பேரூராட்சி 129, தரங்கம்பாடி 105, வைத்தீஸ்வரன்கோவில் 81, மணல்மேடு 103 என்று மாவட்டத்தில் மொத்தம் 858 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று வேட்புமனு பரிசீலனை நடந்தது.
20 மனுக்கள் தள்ளுபடி
அதில் மயிலாடுதுறை நகராட்சி 4 மனுக்களும், சீர்காழி நகராட்சி 3 மனுக்களும் நிராகரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன. அதேபோல குத்தாலம் பேரூராட்சி 11 மனுக்களும், மணல்மேடு பேரூராட்சி 2 மனுக்களும் என மொத்தம் 20 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிகளில் அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன என்பது குறிபிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 123 கவுன்சிலர் பதவிகளுக்கு 838 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
நாளை 7-ந் தேதி வேட்புமனு வாபஸ் பெறுவதற்கு கடைசியாகும்.
Related Tags :
Next Story