தேர்தல் பார்வையாளர் ஆய்வு


தேர்தல் பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Feb 2022 2:04 AM IST (Updated: 6 Feb 2022 2:04 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் வேட்பு மனு பரிசீலனை குறித்து தேர்தல் பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் குறித்த பரிசீலனை நடைபெற்றது.  இந்தநிலையில் வேட்புமனு பரிசீலனை பணிகளை மாவட்ட தேர்தல் பார்வையாளர் பாலச்சந்தர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது வேட்புமனு பரிசீலனை பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மனுக்களை தேவையில்லாமல் நிராகரிக்க வேண்டாம் எனவும், விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆய்வின் போது தேர்தல் அதிகாரியும், நகராட்சி ஆணையாளருமான பாஸ்கரன், தேர்தல் பார்வையாளரும் ஆர்.டி.ஓ.வுமான கல்யாண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 


Next Story