போலீசார் வாகன அணிவகுப்பு


போலீசார் வாகன அணிவகுப்பு
x
தினத்தந்தி 6 Feb 2022 2:13 AM IST (Updated: 6 Feb 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் வாகன அணிவகுப்பு

மதுரை
மதுரையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய பதற்றமான பகுதியில் போலீஸ் அணிவகுப்பு நடத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காலை மதுரை மாநகர தெற்கு துணை போலீஸ் கமிஷனர் தங்கத்துரை மேற்பார்வையில் தெற்குவாசல் சரக போலீஸ் துணை கமிஷனர் சண்முகம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பெத்துராஜ், ஸ்டெல்லாபாய், சப்-இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி, கண்ணன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் மோட்டார் சைக்கிளில் கீரைத்துறை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கீரைத்துறை, வாழைத்தோப்பு, காமராஜபுரம், அனுப்பானடி, சிந்தாமணி உள்ளிட்ட பகுதியில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடத்தினார்கள்.

Next Story