தேர்தல் பார்வையாளர் காரை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம்- பரபரப்பு
அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி வட்டார தேர்தல் பார்வையாளர் காரை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உசிலம்பட்டி
அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி வட்டார தேர்தல் பார்வையாளர் காரை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம்
உசிலம்பட்டி நகராட்சியில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் மனு மீது அளித்த ஆட்சேபனையை நிராகரிப்பு செய்து பாரபட்சமாக தேர்தல் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டி உசிலம்பட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமையில் அ.தி.மு.க.வினர் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிராகரிப்பு செய்ததற்கான பதில் கடிதத்தை வழங்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது வட்டார தேர்தல் பார்வையாளர் ரவிச்சந்திரன் காரை வழிமறித்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
4 மணி நேரம்
இதைதொடர்ந்து அ.தி.மு.க.வினரிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்த கடிதத்தை உசிலம்பட்டி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து வழங்கினார். இதையடுத்து சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது. வேட்புமனு பரிசீலனை நான்கு மணிக்கே முடிந்திருந்த நிலையில் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரிகள் இரவு 10:20 மணிக்கு நோட்டீசு போர்டில் ஒட்டியது அதிருப்தியை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story