மின்கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய அரியவகை ஆந்தை மீட்பு


மின்கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய அரியவகை ஆந்தை மீட்பு
x
தினத்தந்தி 6 Feb 2022 3:05 AM IST (Updated: 6 Feb 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

மின்கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய அரியவகை ஆந்தை மீட்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மலங்கன்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்(வயது 40). சிமெண்டு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டின் முன்பு உயரழுத்த மின்கம்பி செல்கிறது. அதன் அருகே சுமார் 2 கிலோ எடையுள்ள அரிய வகை ஆந்தை ஒன்று, எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் சிக்கியது. இதில் அதன் இறக்கைகளில் காயம் ஏற்பட்டு பறக்க முடியாமல் உயிருக்கு போராடியது. அப்போது அந்த வழியாக சென்ற நடராஜனும், அவரது நண்பர் கார்த்திகேயனும் அந்த ஆந்தையை பத்திரமாக மீட்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறை அலுவலர் மணவாளன், ஆந்தையை பெற்று சின்னவளையம் கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். ஆந்தை குணமடைந்த பின்னர் வனப்பகுதியில் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மின்கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய ஆந்தையை பத்திரமாக மீட்டவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Next Story