அமராவதி ஆற்றுப்பாலம் கழிவுகள்


அமராவதி ஆற்றுப்பாலம் கழிவுகள்
x
தினத்தந்தி 6 Feb 2022 4:36 PM IST (Updated: 6 Feb 2022 4:36 PM IST)
t-max-icont-min-icon

அமராவதி ஆற்றுப்பாலம் கழிவுகள்

மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப் பாலம் பகுதியில் குப்பைகள், கழி வுகள் மலைபோல் குவிந்து உள்ள தால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.   
  குவிந்துள்ள கழிவுகள்
கோவை  திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. இங்குள்ள அமராவதி ஆற்றுப் பாலம் பகுதியில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது. மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில் உ ள்ள 20க்கும் மேற்பட்ட ஊர்களில் செயல்படும் இறைச்சிக் கடைகளின் கழிவுகள், பலவகையான குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் குவிந்துள்ளது. இதனால் சுகாதார க்கேடு ஏற்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணிக்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறது. நடந்து செல்லவே முடியாத நிலை உ ள்ளது. இங்கு பரவிகிடக்கும் இறைச்சிக் கழிவுகளுக்காக வரும் நாய் கள் சண்டையிட்டு ரோட்டின் குறுக்கே  பாய்வதால் வாகன ஓட்டுனர் கள் நிலைதடுமாறி விபத்துக்கள் ஏற்படுகிறது. நடந்து சென்றவர்கள் பலரையும் நாய்கள் கடித்துள்ளன. இதனால் இந்த பகுதியை பயன்ப டுத்தவே மக்கள் அச்சப்படுகின்ற னர். 

Next Story