கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை எம்.எம்.டி.ஏ. காலனி கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகள் மாளவிகா (வயது 17). கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் முதல் மாடியில் உள்ள அறைக்கு சென்ற மாளவிகா, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மாளவிகா, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story