பட்டா வழங்க தேர்வான இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு


பட்டா வழங்க தேர்வான இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Feb 2022 4:55 PM IST (Updated: 6 Feb 2022 4:55 PM IST)
t-max-icont-min-icon

பட்டா வழங்க தேர்வான இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

அணைக்கட்டு

அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட பிச்சாநத்தம், மராட்டி பாளையம், பள்ளிகொண்டா ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் இடம் வழங்கப்பட்டுள்ளது. 

அந்த இடத்தில் பலர் தற்போது வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் பெயரில் அரசு கொடுத்த நமுனா பத்திரத்தை தவிர பட்டா இல்லாததால் அந்த இடத்தில் அரசு தொகுப்பு வீடுகள் கட்ட முடியாமலும் பல்வேறு அரசு சலுகைகள் பெற முடியாமலும் தவித்து வருகின்றனர். 

இதுகுறித்து 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர்.

 மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள், அந்த இடத்தை வருவாய்த்துறை அலுவலர்கள் அளவீடு செய்து விசாரணை நடத்தி அது குறித்து அறிக்கையை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பியிருந்தனர். 

அந்த இடங்களை இன்று மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார். அரசு வழங்கிய வீட்டு மனையில் வீடு கட்டி வசிப்பவர்களிடம், எத்தனை காலமாக இங்கு வசித்து வருகிறீர்கள், யார் பெயரில் இடம் உள்ளதோ அவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா? என்பது போன்ற விவரங்களை கேட்டறிந்தார். 

ஆய்வின்போது அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி, தாலுகா நில அளவையர் சதீஷ், அகரம் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் குபேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story